வியாழன், 3 டிசம்பர், 2020

சண்டைக்காரி நீதான் 💙💚💛💜

'சண்டையிட்ட நாட்கள்' என்பதுபோய்,

இப்போதெல்லாம் நாம் சண்டையிட்டே

நாட்களாயிற்றென ஒரு சண்டையை

வேண்டுமென்றே இழுக்கும் வித்தையை

எங்கேயடி கற்றுக்கொண்டாயோ நீ...!?!


~ சண்டைக்கோழி நீதான் ♥ ~




செவ்வாய், 3 நவம்பர், 2020

புல(னாகாத)னம் 💙💚💛💜

 பின்னிரவினையும் தாண்டி
நீண்டுகொண்டேப் போகும்
நமது WhatsApp Chatடானது
பெரும்பாலுமே 'Good Night!'
என்றே தொடங்கப்படுவதின்
ஆச்சரியத்தினை என்றாவது
ரசித்திருக்கிறாயா கண்மணி?!

~ typing... ♥ ~



ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இன்னுமொன்று 💙💚💛💜

நினைவுகளால் மட்டும் தனித்திருந்து

உன்னைவிட்டு நீங்கிப்பின் பிரிந்திருந்து

வாழப்பழகிக்கொண்டிருந்த என்னை,

இப்போது விடியவிடிய விழித்திருந்து 

எழுதும்படி செய்துவிட்டாயடி நின்னை.


எப்போதும்போலவே இம்முறையும் நீயே,

எனையெரித்திடும் அணைக்கின்ற தீயே;

தகிக்கின்ற என் பேனாவின் மையிலிருந்து,

தடுக்கின்ற தடையெதுவும் இல்லாதிருந்து,

திகைக்கின்ற விதமாய் வார்த்தைகளாகி,

திடுக்கிட கவிதைவடிவமாகி முன்நின்றாய்.!