ஞாயிறு, 27 மார்ச், 2022

முழுமதியாய் வந்த திருமதி

 யாரென்றறியாதிருந்தபோதிலே 

முன்பே நான் எழுதிவைத்திருந்த

எல்லா காதல் கவிதைகளுக்குமே;

அன்பே, நீயே நிரந்தரமாயிப்போது 

முகவரியென்றாகிப்போனாயடி,

இனியெழுதப்போகும் கவிகளுக்கும் 

முதல்வரிகளுமாகிப்போனாயடி நீ.!




சனி, 19 பிப்ரவரி, 2022

ஆதியிலே வார்த்தை . . .

வார்த்தையானவரைப் பற்றி நான் எழுதிய வரிகள் பாடலாக, 

உம்மைப் பாட வார்த்தை அற்றிருந்தேன், இயேசு நீரே வார்த்தை என்றறிந்தேன், உலகமும் சகலமும் உமதாலே, உருவானதே உம் அறிவாலே, எம்மைக் காக்கும் ஜீவன் நீரே, எங்கள் வாழ்வின் ஔியானிரே, இருளானதும்மை பற்றவில்லை, உம் அருளால் எம்மை நீர் பற்றினீரே.!




வெள்ளி, 28 ஜனவரி, 2022

எது காதல்?

 எது காதல் என்றுன்னைக் கேட்டால்,

நீயென்ன சொல்லியிருப்பாயென்று

நான் யூகித்துவைத்திருக்கும் பதிலை,

மிகச்சரியாக நீ யோசித்துமுடிக்கின்ற

அவ்வினாடியிலேயே தீர்மானமாகிறது

எது காதல் என்பதற்கான தகுந்த விடை.!