புதன், 13 ஏப்ரல், 2022

அனைவருக்குமானவரானவரே

அனைவருக்கும் ஆனவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பாடல் என் வரிகளில்,

செல்கிறீர் நீண்ட தூரம் தோள்களில் தாங்கா பாரம் வழியெங்கும் சிந்திய இரத்தத்தின் ஈரம் ஆனீர் எங்களுக்காய் மா கோரம் வேண்டாமென்றீர் அனைத்து அதிகாரமே ஈந்தளித்தீர் உம்மையே ஆகாரமாய் மாலைமங்கிய அந்நேரம் சூழ்ந்தது அந்தகாரம் வேதவாக்கியம் நிறைவேற ஆனீர் ஆதாரம் உயிர்த்தெழுந்தார் தடைகடந்தார் பாதாளத்தின் வாசல்களை உடைத்தெறிந்தார் ஜெயமடைந்தார் கனம்சிறந்தார் அவரே எவருமில்லை அவருக்கு நிகரே அனைவருக்குமானவர் ஆனாரே...!




ஞாயிறு, 27 மார்ச், 2022

முழுமதியாய் வந்த திருமதி

 யாரென்றறியாதிருந்தபோதிலே 

முன்பே நான் எழுதிவைத்திருந்த

எல்லா காதல் கவிதைகளுக்குமே;

அன்பே, நீயே நிரந்தரமாயிப்போது 

முகவரியென்றாகிப்போனாயடி,

இனியெழுதப்போகும் கவிகளுக்கும் 

முதல்வரிகளுமாகிப்போனாயடி நீ.!




சனி, 19 பிப்ரவரி, 2022

ஆதியிலே வார்த்தை . . .

வார்த்தையானவரைப் பற்றி நான் எழுதிய வரிகள் பாடலாக, 

உம்மைப் பாட வார்த்தை அற்றிருந்தேன், இயேசு நீரே வார்த்தை என்றறிந்தேன், உலகமும் சகலமும் உமதாலே, உருவானதே உம் அறிவாலே, எம்மைக் காக்கும் ஜீவன் நீரே, எங்கள் வாழ்வின் ஔியானிரே, இருளானதும்மை பற்றவில்லை, உம் அருளால் எம்மை நீர் பற்றினீரே.!