ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நியாயமான கோபம்

பெருந்திரள் ஜனக்கூட்டத்தை
காண்கிறபொழுதெல்லாமே
ஆத்திரமும் பெருங்கோபமும்
அடக்கமுடியாமல் வருகிறது,

அறிவில்லாமையினால்தானே
சங்காரமாகிறார்களேயென்று
நன்றாகத் தெரிந்திருந்துங்கூட
உணர்வில்லாத மனிதர்களாய்,

இன்னும் தனக்காகமட்டுமாய்
வேண்டி வாழ்ந்துக்கொண்டும்
பணம் பதவிக்காக சண்டையும்
அரசியலும் பண்ணிக்கொண்டு,

கொஞ்சமுங்கூட சிந்தையின்றி
ஆத்துமபாரம் சிறிதுமின்றியே
தான் ஆயத்தப்படவுமல்லாமல்
பிறரையும் ஆயத்தப்படுத்தாமல், 

பரலோகில் தங்களுக்கோரிடம்
உண்டென்றெண்ணி பொய்யாய்
பெயருக்கு கிறிஸ்தவர்களாய்
வாழும் பெயர்க்கிறிஸ்தோர்மீது.!






ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பிரிதலிலோர்ப்புரிதல்

எவர்களுக்காகவோ எழுதியபிறகு
நானிட்ட மணமுறிவு கவிதைக்கு
நீயிட்ட ஹார்டினால் ♥ தொடங்கியது,
நாம்வாழப்போகும் நமக்கானவாழ்வு.

அடடே '!' குறி.




மண மு றி வு

ஒருமனதாக இருவருமே
ஒருசேர முடிவெடுத்தபின்,
ஒருமித்து அறிவித்தனர்
தங்களது விவாகரத்தை,
கருத்தொற்றுமையானது
அற்றுப்போய்விட்டதென்று.

அடடே '!' குறி.




திங்கள், 27 செப்டம்பர், 2021

சிந்திக்கவும் - சந்திக்கவும்

கர்த்தாவே, 

என் தேவைகளை

நீரே சந்திப்பதால்,

அனுதினமுமும்மை 

மனதார சிந்தித்து,

பரலோகில் ஓர்நாள் 

முகமுகமாயும்மை 

சந்திக்கவேண்டுவதே

என் தேவையாயிற்று.!





ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

சாதி மறுப்பு

தன்னைப்போலவே இருக்கின்ற,

சாதிபேதம் பார்க்கவேமாட்டேன்

என்கிற திடமான முடிவிலிருக்கும்

பெண்ணைத்தான் மணமுடிப்பேன்

என்று தீவிரமாய்த் தேடியலைந்து

மணம்புரிந்து கொண்டானொருவன்

எதிர்பார்த்தவாறே பெண்ணொருத்தியை,

தனது சாதியிலேயே...!


அடடே ! குறி. 




திங்கள், 14 ஜூன், 2021

இரத்ததானதினம் (June 14th)

ஈனமான என்னையுமும்

இனமாக ஆக்கத்தானும்

ஜனமாக ஏற்றுக்கொண்டு

தானமாயும் குருதிசிந்தியே

ஜீவனை மீட்டத் தந்தையே,

சிந்தின அன்பினைநானும்

சிந்தனை செய்திடுவேனாளும்.!


குறிப்பு:

இன்று ஜூன் 14-ஆம் தேதி, இன்று இந்தநாளை உலக இரத்ததான தினமாகக் கொண்டாடுவர், ஆனால் நமக்காக நமது பாவ சாப நோய்களுக்காக தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்ட நமது மீட்பரையும் நாம் இந்நாளில் நினைவுகூறவே இக்கவிதை.