ஞாயிறு, 12 ஜனவரி, 2020

மன்னா

"மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல,
கர்த்தராகிய தேவனுடைய வாயிலிருந்து 
புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் 
பிழைப்பான்." என்கிற உம்முடைய 
இவ்வார்த்தையே என்னை பசியாற்றுகிறது  
பணமற்ற பசியுற்ற நாட்களில்.!

புதன், 20 நவம்பர், 2019

தொடர்பெல்லைக்கு வெளியே

தொடர்பற்றுப்போதல் என்பதொருவரம்,
எவருடனாயினும் எதனுடனாயினும்;
வரம்வேண்டிப் போகப்போகிறேன், நான்
வரவேண்டிப் பார்த்திருக்காதீர்கள்;
யாருக்குமிங்கு எளிதில் கிட்டாத வரமாகும்,
யானுமுயன்று மீண்டு(ம்)வர  சிலபல வாரமாகும்.!ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ஆற்றாமை

வீணடிக்கப் பட்டிருக்கவேண்டிய
விந்துக்களாய்ப் போகாமல்,
உயிர்பெற்று இன்னுமென்னுயிரையும் 
சேர்த்தே வாங்கிக்கொண்டு
இருக்கிறார்கள் இங்கொருசிலர், 
ஜந்துக்களாய் நோகாமல்.!