ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கனம் மடியிலில்லை ♥

நீயின்றி நான்மட்டும்  தனியாக 
செல்லும் வெகு தூரப்பயணங்களில்
என் Luggagesசைவிடவும், உன்னைப்பற்றிய 
நினைவுகளே எனக்கு மிகவும் 
க(வ)னமாகத் தோன்றுகின்றன.!

பி(ரி/றி)தொரு காதல் ♥

இனியொருபோதும் வழியில்லை
நாங்களிணைந்து வாழ்வதற்கு
எல்லாம் முடிந்தேவிட்டதென்று
துக்கத்தோடே நாட்கள்கடந்து
ஏக்கங்கொண்டிருந்த நான்,
எதிர்ப்பாராத நாளொன்றின்
நினையாவேளையில் வந்தாய்
என்னுடையயெல்லாமுமாய் நீ,
ஆறுதலளித்து மீட்டவளாய்
மீண்டுமொரு என்னவளாய்.!

நினைவுகளின்கண் தேடல் ♥

கிட்டத்தட்ட உன்னுடைய உயரத்தில்
ஏறக்குறைய அசப்பில் உன்போல
யாரையாவது கடக்க நேரிட்டால்
சட்டென தோன்றும்தான் எனக்கும்
அசட்டுத்தனமான ஒரு எண்ணம்
அது நீயாயிருக்க வேண்டுமென.!