நினைவுகளால் மட்டும் தனித்திருந்து
உன்னைவிட்டு நீங்கிப்பின் பிரிந்திருந்து
வாழப்பழகிக்கொண்டிருந்த என்னை,
இப்போது விடியவிடிய விழித்திருந்து
எழுதும்படி செய்துவிட்டாயடி நின்னை.
எப்போதும்போலவே இம்முறையும் நீயே,
எனையெரித்திடும் அணைக்கின்ற தீயே;
தகிக்கின்ற என் பேனாவின் மையிலிருந்து,
தடுக்கின்ற தடையெதுவும் இல்லாதிருந்து,
திகைக்கின்ற விதமாய் வார்த்தைகளாகி,
திடுக்கிட கவிதைவடிவமாகி முன்நின்றாய்.!