ஈனமான என்னையுமும்
இனமாக ஆக்கத்தானும்
ஜனமாக ஏற்றுக்கொண்டு
தானமாயும் குருதிசிந்தியே
ஜீவனை மீட்டத் தந்தையே,
சிந்தின அன்பினைநானும்
சிந்தனை செய்திடுவேனாளும்.!
குறிப்பு:
இன்று ஜூன் 14-ஆம் தேதி, இன்று இந்தநாளை உலக இரத்ததான தினமாகக் கொண்டாடுவர், ஆனால் நமக்காக நமது பாவ சாப நோய்களுக்காக தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்ட நமது மீட்பரையும் நாம் இந்நாளில் நினைவுகூறவே இக்கவிதை.