திங்கள், 14 ஜூன், 2021

இரத்ததானதினம் (June 14th)

ஈனமான என்னையுமும்

இனமாக ஆக்கத்தானும்

ஜனமாக ஏற்றுக்கொண்டு

தானமாயும் குருதிசிந்தியே

ஜீவனை மீட்டத் தந்தையே,

சிந்தின அன்பினைநானும்

சிந்தனை செய்திடுவேனாளும்.!


குறிப்பு:

இன்று ஜூன் 14-ஆம் தேதி, இன்று இந்தநாளை உலக இரத்ததான தினமாகக் கொண்டாடுவர், ஆனால் நமக்காக நமது பாவ சாப நோய்களுக்காக தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்ட நமது மீட்பரையும் நாம் இந்நாளில் நினைவுகூறவே இக்கவிதை.

வியாழன், 3 டிசம்பர், 2020

சண்டைக்காரி நீதான் 💙💚💛💜

'சண்டையிட்ட நாட்கள்' என்பதுபோய்,

இப்போதெல்லாம் நாம் சண்டையிட்டே

நாட்களாயிற்றென ஒரு சண்டையை

வேண்டுமென்றே இழுக்கும் வித்தையை

எங்கேயடி கற்றுக்கொண்டாயோ நீ...!?!


~ சண்டைக்கோழி நீதான் ♥ ~




செவ்வாய், 3 நவம்பர், 2020

புல(னாகாத)னம் 💙💚💛💜

 பின்னிரவினையும் தாண்டி
நீண்டுகொண்டேப் போகும்
நமது WhatsApp Chatடானது
பெரும்பாலுமே 'Good Night!'
என்றே தொடங்கப்படுவதின்
ஆச்சரியத்தினை என்றாவது
ரசித்திருக்கிறாயா கண்மணி?!

~ typing... ♥ ~