நமக்கிடையே பெரிய கருத்துமோதல்களெல்லாம்
ஒன்றும் ஏற்படவில்லை,
நாமொருவரையொருவர் தொந்தரவு செய்யாதிருக்க
முடிவேதும் எடுக்கவில்லை,
யார்முதலில் மீண்டும் பேசத்தொடங்குவதென்ற
தயக்கங்களும் எழவில்லை,
ஒருமுறையேனும் நீயும்நானும் நினைத்துக்
கொள்ளாத நாளுமில்லை,
இவ்விடைவெளியானது காலத்திற்கும் தொடர்ந்து
நீடிக்கப் போவதுமில்லை,
நம்மீதுநாம்கொண்ட புரிதல்களை இதுபெரிதாக
பாதிக்கப் போவதுமில்லை,
இதெல்லாம் தெரிந்திருந்துமே மீண்டும்தொடர
நாமேன் யோசிக்கவேயில்லை?!
குறிப்பு: நன்குபழகிப்பின் ஏதோவொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உறவை மீட்டெடுக்க முனைந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக