புதன், 17 அக்டோபர், 2018

நீ(தி)யும் நானும்

"நீதிமன்றத்திற்கோர் நன்றிநவிலல்"

நீண்ட நெடுநாளுக்குப் பிறகு என் முன்னாள் காதலன் 'ராஜா'வை அவனது குடும்பத்துடன் சேர்த்து சந்தித்தது சற்றே வருத்தமளித்தாலும் மீண்டும் அவனைக்கண்ட மகிழ்ச்சியே போதும் என்றிருந்து எனக்கு அப்பொழுது. ஒரு சில பரஸ்பர உரையாடல்களுக்குப் பிறகு இருவரும் எங்களது கட்செவியஞ்சல் எண்களை பரிமாறிக் கொண்டபின் விடைபெற்றோம்.

எங்களது உரையாடலானது கட்செவியஞ்சல் வாயிலாக அன்று இரவே தொடங்கி தினந்தோறும் என்றாகிப்போன ஓரிரு வாரங்கள் கழித்து எனக்குள் புதைந்துபோன அந்த பழைய காதலானது மீண்டும் தளிர்த்தது. எனக்கும் திருமணம் ஆகிவிட்டதுதான், நானதை அவனிடம் தயக்கத்தோடே தெரிவிக்க அவனோ அது எனக்கு கடந்தவாரமே மீண்டும் பூத்துவிட்டததென்றான்.

பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து நாங்களிருவருமே தத்தம் வாழ்க்கை துணைகளுக்குத் தெரியாமல் அவர்களை ஏமாற்றிவிட்டு வெளியூர் சென்று சந்தோசமாக வாழலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறலாம் என்ற சமயத்தில் திடீரென வந்தது எங்களது வாழ்வை மாற்றிப்போடும் அந்த செய்தி. அதைக்கேட்டு எங்கள் முடிவை மாற்றி அங்கேயே தைரியமாக இருக்க முற்பட்டோம்.

அந்த செய்தியானது "உச்ச நீதிமன்றம் 'Section 377'யையும் மற்றும் 'Section 497'யையும் தண்டனையற்ற குற்றமாக அறிவித்துவிட்டது". எனவே நாங்கள் இனி எதற்காக பயந்து ஒதுங்கி வாழவேண்டும் தைரியமாகவே எங்களூரிலேயே  இப்பொழுது தனிவீடு எடுத்து மிகவும் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களை வாழவைத்த நீதிக்கு என் நன்றி.!

இப்படிக்கு,
சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும்
சிவா.
(இந்திய குடிமகன்)


குறிப்பு: நான் இதனை ஆதரிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஒப்புக்கொள்ளவில்லை. Climaxல் ஒரு Twist தரலாமேயென்றுதான் கதையை இப்படி முடித்தேன். மேலும் இது ஒரு பாவம், ஒரு நாடே இதனை அங்கீகரிப்பது அந்நாட்டிற்கு சாபத்தை கொண்டுவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக