ஏதுமில்லாமல் இருந்தேன் நான்,
யாதுமாகி வந்தீர் எனக்காய்;
ஒருபோதும் விலகாது நின்றீரே,
எதிலேயும் விழுகாது காத்தீரே;
உம்மையல்லாமல் ஒருபோதும் என்னாலுமே,
ஒன்றுஞ்செய்ய இயலாதுதான் எந்நாளுமே;
என் பாவங்கள்யாவும் நீங்கத்தானே,
பலியானீரே எனக்காக நீங்க தானே;
எனக்காக சிலுவையில் நிர்வாணியானிரே,
பாவத்தைப்போக்கும் நிவாரணியுமானிரே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக