புதன், 20 நவம்பர், 2019

தொடர்பெல்லைக்கு வெளியே

தொடர்பற்றுப்போதல் என்பதொருவரம்,
எவருடனாயினும் எதனுடனாயினும்;
வரம்வேண்டிப் போகப்போகிறேன், நான்
வரவேண்டிப் பார்த்திருக்காதீர்கள்;
யாருக்குமிங்கு எளிதில் கிட்டாத வரமாகும்,
யானுமுயன்று மீண்டு(ம்)வர  சிலபல வாரமாகும்.!



ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ஆற்றாமை

வீணடிக்கப் பட்டிருக்கவேண்டிய
விந்துக்களாய்ப் போகாமல்,
உயிர்பெற்று இன்னுமென்னுயிரையும் 
சேர்த்தே வாங்கிக்கொண்டு
இருக்கிறார்கள் இங்கொருசிலர், 
ஜந்துக்களாய் நோகாமல்.!


திங்கள், 19 ஆகஸ்ட், 2019

புதுப்பித்தாக்கம்

நமக்கிடையே பெரிய கருத்துமோதல்களெல்லாம்
ஒன்றும் ஏற்படவில்லை,
நாமொருவரையொருவர் தொந்தரவு செய்யாதிருக்க
முடிவேதும் எடுக்கவில்லை,
யார்முதலில் மீண்டும் பேசத்தொடங்குவதென்ற
தயக்கங்களும் எழவில்லை,
ஒருமுறையேனும் நீயும்நானும் நினைத்துக்
கொள்ளாத நாளுமில்லை,
இவ்விடைவெளியானது காலத்திற்கும் தொடர்ந்து
நீடிக்கப் போவதுமில்லை,
நம்மீதுநாம்கொண்ட புரிதல்களை இதுபெரிதாக
பாதிக்கப் போவதுமில்லை,
இதெல்லாம் தெரிந்திருந்துமே மீண்டும்தொடர
நாமேன் யோசிக்கவேயில்லை?!

குறிப்பு: நன்குபழகிப்பின் ஏதோவொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உறவை மீட்டெடுக்க முனைந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்... 

புதன், 10 ஏப்ரல், 2019

செம்ம 🔥 மச்சி ♥

வெந்து தணிந்து
பின்கொளுத்தும்
இவ்வெய்யிலின்
கொடுமையானது, 
நாமிட்டுக்கொள்ளும்
முத்தச்சண்டையின் 
முடிவிலென்னை
வென்று, தனித்து
நீவிடும் பெருமூச்சின்
உஷ்ணத்திற்கு ஈடானது.!

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கனம் மடியிலில்லை ♥

நீயின்றி நான்மட்டும்  தனியாக 
செல்லும் வெகு தூரப்பயணங்களில்
என் Luggagesசைவிடவும், உன்னைப்பற்றிய 
நினைவுகளே எனக்கு மிகவும் 
க(வ)னமாகத் தோன்றுகின்றன.!

பி(ரி/றி)தொரு காதல் ♥

இனியொருபோதும் வழியில்லை
நாங்களிணைந்து வாழ்வதற்கு
எல்லாம் முடிந்தேவிட்டதென்று
துக்கத்தோடே நாட்கள்கடந்து
ஏக்கங்கொண்டிருந்த நான்,
எதிர்ப்பாராத நாளொன்றின்
நினையாவேளையில் வந்தாய்
என்னுடையயெல்லாமுமாய் நீ,
ஆறுதலளித்து மீட்டவளாய்
மீண்டுமொரு என்னவளாய்.!

நினைவுகளின்கண் தேடல் ♥

கிட்டத்தட்ட உன்னுடைய உயரத்தில்
ஏறக்குறைய அசப்பில் உன்போல
யாரையாவது கடக்க நேரிட்டால்
சட்டென தோன்றும்தான் எனக்கும்
அசட்டுத்தனமான ஒரு எண்ணம்
அது நீயாயிருக்க வேண்டுமென.!