செவ்வாய், 19 டிசம்பர், 2017

எனது விகற்பாற்கவி (PALINDROME) கவிதை

'விகற்பாற்கவி' என்பது இடமிருந்து வலமாக படித்தாலும் வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே மாதிரி இருப்பது. உதாரணத்திற்கு தாத்தா, பாப்பா, மாமா, காக்கா, விகடகவி, Etc. 
நானும் அவ்வாறான முயற்சியில் எனக்குத்தெரிந்த வகையில் கவிதை என்கிற பெயரில் ஒன்றை இயற்றியுள்ளேன்.


முன்குறிப்பு:
Palindrome என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகிய 'விகற்பாற்கவி' என்னும் இந்தச் சொல்லே அதன் பொருளை தருகின்ற சிறப்பு நம் தமிழுக்கு மட்டுமே உண்டு.!
(சொல்லிலேயும் நாம் கலைவண்ணம் கண்டோம்)


>> வா நோவா, <<
>> சேர அரசே, <<
>> கானகா, <<
>> வானவா.! <<


>> மேளதாளமே, <<
>> மேகராகமே, <<
>> மோகமேகமோ, <<
>> மேலுமேலுமே.! <<


>> தேமுதே <<
>> தேடுதே <<
>> தேறுதே <<
>> தேயுதே.! <<


>> வைர இரவை, <<
>> தைத்த விதத்தை; <<
>> துழாவி, விழாது <<
>> மேகமே.! <<


>> மாதமா, <<
>> மாயமா, <<
>> மாறுமா, <<
>> மாயுமா? <<


>> மோகமோ, <<
>> மோனமோ, <<
>> மோளமோ, <<
>> மோதுமோ? <<


>> நீ, <<
>> வினவி <<
>> கற்க <<
>> தோணுதோ? <<


>> தீ <<
>> தந்த <<
>> பூ, <<
>> வாழவா? <<


பின்குறிப்பு:
நான் உருவாக்கிய விகற்பாற்கவி வார்த்தைகள், இவைகளை கவிதையில் பயன்படுத்த முடியவில்லை மேலும் எனக்கு தெரியவில்லை.


துருவி தழுவி, விழுத விருது.
திருகு துருவ, வருது குருதி.
மேயுமே சுப பசு மேயுமே
துவாரக கரவாது.
வைத விதவை.
வார வரவா.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

எனது சிற்பி

உனக்கே தெரியாமல்
நீ என்னை ஒரு கவிஞனாக
செதுக்கிக் கொண்டிருக்கிறாய்
என் கண்மணியே.!

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குட்டிக்குளியல்

மழை பொய்த்துப் போகிறது,
மலை விலகிப் போகிறது,
மழலையினிடத்தில் நாமும் கொஞ்சம் தோற்றுதான் போகிறோம்.!

ஆனந்தக்குளியலிடும் அழகான அற்புதமே,
உந்தன் பிஞ்சுமேனியில்பட்டு நன்னீ்ரும் பன்னீராகிறதே.!

மழைதான் தேவையா என்று நினைக்க;
மழலை தேவதையே உன்னை நனைக்க.?!


குதுகாலம் கொப்பளிக்கும் குழந்தையிடம்,
ஆர்ப்பரிக்கும் கோவம்கூட மண்டியிடும்.!


தன்னை மறந்து
தாயின் அரவணைப்பில்
திளைக்கும் மகிழ்ச்சிக்குமுன்;
தீமையே வந்தாலும்
துயரமே தந்தாலும்
தூவானம் போல்
தென்றலாய் தாயும்
தேவதைபோல் சேயும்,
தைரியமாகவேதான்
தொட்டுப்பார்க்கத்தான்
தோன்றுகிறதோ மேகத்தை.!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

நீ பாேதும்

எனக்குள் கொட்டிக்கிடக்கும் கவிதைகளை
வெளிக்கொணர எனக்கு நீ ஒருத்தி மட்டும் போதும்.!

வெள்ளி, 13 ஜனவரி, 2017

திருமண கவிதைகள்

திருமண வாழ்த்துக்கவிதைகள்:-

1.)
மனம் ஒத்து மணம் புரியும் இருவரும்,
இன்றுபோல் என்றுமே மனமாறாமல்
இருக்க மனமார வாழ்த்துகிறோம்.!


2.)
பெண்:
இன்றிலிருந்து உன்னவளாகும் நானும்,
நீயெனக்கு அணிவிக்கும் மங்கல நாணும்,
என்னோடு சேர்ந்தே மகிழ்ச்சியில் நாணும்.!
ஆண்:
இன்றிலிருந்து என்னவளாகும் நீயும்,
மனதார வாழ்த்துவார்கள் என் தாயும்,
நீயேற்றப்போகும் தீபத்தின் தீயும்,
வெளிச்சத்தில் இருளும் தேயும்.!



3.)
வெவ்வேறு மாம்சமான நீங்களிருவரும்,
இனி ஒரே அம்சமான பாண்டமாயிருங்கள்;
காதலாகி கசிந்துருகிய நீங்கள் இன்று,
மணமாகி இசைந்து வாழுங்கள் என்றும்;
மனதை பரிமாறிக்கொண்டீர்கள் நீங்கள் அன்றே,
மாலைமாற்றி பயணத்தை தொடங்குங்கள் நன்றே;
மணவாளனான _______ம் & மணவாளியான _______ம்,
வாழ்க பல்லாண்டு, வளர்க பலகோடிநூறாண்டு.!



4.)
ஒருமனப்பட்டு
இரு உள்ளங்கள்
மூன்றுமுடிச்சிட்டு,
நான்குபேர் வாழ்த்தி
ஐம்பூதங்கள் சாட்சியாய்
அறுசுவையோடு
ஏழுராகங்களிசைத்து,
எட்டுத்திக்கும் சென்று
நவரத்தினங்கள் போல்
பத்தும்படியல்ல, ஒருவரையொருவர்
பற்றும்படி வாழ மனதார வாழ்த்துகிறோம்.!



5.)
நாமாகும் நாள் இது:-

எனக்கானவளாக நீயாகும் நாளிது,
உனக்கானவனாக நானாகும் நாளிது,
நமக்கானவராக நாமேயாகும் நாளிது;
ஆம், நமக்கான நாளிது,
நீயும் நானும் நாமாகும் நாள் இது.!

வியாழன், 12 ஜனவரி, 2017

எனது கவிதை

Single-ஆக இருந்தேன் நான் அப்பொழுது,
Mingle ஆனேன் உன்னிடம் இப்பொழுது,
Tingle-ஆக இருந்த என் மனதும்கூட,
Jingle-பாடி மகிழ்ச்சியில் துள்ளுகிறதே.!

திங்கள், 9 ஜனவரி, 2017

எனது கவிதை

எனக்கானவளுக்கான தேடலை நிறுத்திவிட்டேன்
உன்னைப்பார்த்த அந்த முதல் நொடியிலேயே,
என் கற்பனை உருவாக்கத்திற்கு உருவம்தந்தேன்
அழகிற்கே உருவகமாயிருக்கும் உன்னைக்கண்டு.!

என் கனவு யாவற்றையும் உண்மையாக்கினாய்
உன்னழகால் வென்றென்னை நீயே மயக்கினாய்,
உன்னன்பால் என் கவலைகளை மாயமாக்கினாய்
முடிவில் என்னை முழுவதும் உன் மயமாக்கினாய்.!