வெள்ளி, 13 ஜனவரி, 2017

திருமண கவிதைகள்

திருமண வாழ்த்துக்கவிதைகள்:-

1.)
மனம் ஒத்து மணம் புரியும் இருவரும்,
இன்றுபோல் என்றுமே மனமாறாமல்
இருக்க மனமார வாழ்த்துகிறோம்.!


2.)
பெண்:
இன்றிலிருந்து உன்னவளாகும் நானும்,
நீயெனக்கு அணிவிக்கும் மங்கல நாணும்,
என்னோடு சேர்ந்தே மகிழ்ச்சியில் நாணும்.!
ஆண்:
இன்றிலிருந்து என்னவளாகும் நீயும்,
மனதார வாழ்த்துவார்கள் என் தாயும்,
நீயேற்றப்போகும் தீபத்தின் தீயும்,
வெளிச்சத்தில் இருளும் தேயும்.!



3.)
வெவ்வேறு மாம்சமான நீங்களிருவரும்,
இனி ஒரே அம்சமான பாண்டமாயிருங்கள்;
காதலாகி கசிந்துருகிய நீங்கள் இன்று,
மணமாகி இசைந்து வாழுங்கள் என்றும்;
மனதை பரிமாறிக்கொண்டீர்கள் நீங்கள் அன்றே,
மாலைமாற்றி பயணத்தை தொடங்குங்கள் நன்றே;
மணவாளனான _______ம் & மணவாளியான _______ம்,
வாழ்க பல்லாண்டு, வளர்க பலகோடிநூறாண்டு.!



4.)
ஒருமனப்பட்டு
இரு உள்ளங்கள்
மூன்றுமுடிச்சிட்டு,
நான்குபேர் வாழ்த்தி
ஐம்பூதங்கள் சாட்சியாய்
அறுசுவையோடு
ஏழுராகங்களிசைத்து,
எட்டுத்திக்கும் சென்று
நவரத்தினங்கள் போல்
பத்தும்படியல்ல, ஒருவரையொருவர்
பற்றும்படி வாழ மனதார வாழ்த்துகிறோம்.!



5.)
நாமாகும் நாள் இது:-

எனக்கானவளாக நீயாகும் நாளிது,
உனக்கானவனாக நானாகும் நாளிது,
நமக்கானவராக நாமேயாகும் நாளிது;
ஆம், நமக்கான நாளிது,
நீயும் நானும் நாமாகும் நாள் இது.!

வியாழன், 12 ஜனவரி, 2017

எனது கவிதை

Single-ஆக இருந்தேன் நான் அப்பொழுது,
Mingle ஆனேன் உன்னிடம் இப்பொழுது,
Tingle-ஆக இருந்த என் மனதும்கூட,
Jingle-பாடி மகிழ்ச்சியில் துள்ளுகிறதே.!

திங்கள், 9 ஜனவரி, 2017

எனது கவிதை

எனக்கானவளுக்கான தேடலை நிறுத்திவிட்டேன்
உன்னைப்பார்த்த அந்த முதல் நொடியிலேயே,
என் கற்பனை உருவாக்கத்திற்கு உருவம்தந்தேன்
அழகிற்கே உருவகமாயிருக்கும் உன்னைக்கண்டு.!

என் கனவு யாவற்றையும் உண்மையாக்கினாய்
உன்னழகால் வென்றென்னை நீயே மயக்கினாய்,
உன்னன்பால் என் கவலைகளை மாயமாக்கினாய்
முடிவில் என்னை முழுவதும் உன் மயமாக்கினாய்.!