வியாழன், 3 டிசம்பர், 2020

சண்டைக்காரி நீதான் 💙💚💛💜

'சண்டையிட்ட நாட்கள்' என்பதுபோய்,

இப்போதெல்லாம் நாம் சண்டையிட்டே

நாட்களாயிற்றென ஒரு சண்டையை

வேண்டுமென்றே இழுக்கும் வித்தையை

எங்கேயடி கற்றுக்கொண்டாயோ நீ...!?!


~ சண்டைக்கோழி நீதான் ♥ ~




செவ்வாய், 3 நவம்பர், 2020

புல(னாகாத)னம் 💙💚💛💜

 பின்னிரவினையும் தாண்டி
நீண்டுகொண்டேப் போகும்
நமது WhatsApp Chatடானது
பெரும்பாலுமே 'Good Night!'
என்றே தொடங்கப்படுவதின்
ஆச்சரியத்தினை என்றாவது
ரசித்திருக்கிறாயா கண்மணி?!

~ typing... ♥ ~



ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இன்னுமொன்று 💙💚💛💜

நினைவுகளால் மட்டும் தனித்திருந்து

உன்னைவிட்டு நீங்கிப்பின் பிரிந்திருந்து

வாழப்பழகிக்கொண்டிருந்த என்னை,

இப்போது விடியவிடிய விழித்திருந்து 

எழுதும்படி செய்துவிட்டாயடி நின்னை.


எப்போதும்போலவே இம்முறையும் நீயே,

எனையெரித்திடும் அணைக்கின்ற தீயே;

தகிக்கின்ற என் பேனாவின் மையிலிருந்து,

தடுக்கின்ற தடையெதுவும் இல்லாதிருந்து,

திகைக்கின்ற விதமாய் வார்த்தைகளாகி,

திடுக்கிட கவிதைவடிவமாகி முன்நின்றாய்.!



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஊழியன்

பரியாசங்கள் பட்டாலும் பிரயாசங்களுடன்
விசனங்கள் பல நேர்ந்தாலும் வசனங்களை
உண்மையாய் அறிவிப்பவனே கர்த்தரின்
ஊழியக்காரன்.!


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

முகக்கவசம் 😷

எல்லார் வீட்டிற்குள்ளும் கொத்துக்கொத்தாக,

நம்மிடமிருந்து பறிக்கவியலாதபடி கா(ய்)த்து,

தொங்கிக் கொண்டிருக்கிறது வெவ்வேறிடங்களில்,

உன்னுடையதது என்னுடையதிதுவென பிரிக்கப்பட்டு,

பலநிறங்களில் வெவ்வேறு சைஸ்களில் மாஸ்க்குகள்...

அடடே "!" குறி.


திங்கள், 13 ஜூலை, 2020

கூரில்லா மரணம்

முன்குறிப்பு:
இக்கவிதை என் நெருங்கிய கல்லூரிப்பருவ நண்பன் 'பாலமுரளி கிருஷ்ணா'வின் எதிர்பாராத மரணத்தின்(7-1-2014) விளைவாலும் அதனாலுண்டான வேதனையாலும் அவன்மீதிருந்த ஒரு பாசத்தாலும் அப்போதே கர்த்தர்மீதிருந்த அசைக்கமுடியாத விசுவாசத்தாலும் தோன்றியது.

"என்னுற்ற நண்பனை மீண்டும் உயிரோடு
காண்பதற்காகவே இப்பொழுதெல்லாம்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது
மிகச்சமீபமாய் இருக்கவேண்டுமென
வேண்டிக்கொள்வதே என் ஜெபமாயிற்று.!"

பின்குறிப்பு:
இக்கவிதையானது கண்டிப்பாக உண்மையாகத்தான் போகிறது, நானும் அவனை மீண்டும் காணத்தான் போகிறேன், என்னகொஞ்சம் அதற்கு சிறிது காலமாகும். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்"(மத்தேயு 24:36 & மாற்கு 13:32). இது எப்படிச் சாத்தியமாகும் என்பதையும் சொல்லுகிறேன்.

"கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் 'முதலாவது' எழுந்திருப்பார்கள். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்." - I தெசலோனிக்கேயர் 4: 16 & 18. இந்த வசனத்தில் சொல்லியுள்ளபடியே இது ஆகும் அப்போது அவனும் எழுப்பப்படுவான், நானும் அவனை முகமுகமாய் காண்பேன்.

நானும் இதனை வெறுமனே நம்பாமல், ஆணித்தரமாக உத்திரவாதமாக நம்பி விசுவாசிக்கிறேன், ஏனெனில் "வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" - மத்தேயு 5: 18 என்கிற வசனத்தின்படி இதெல்லாம் கட்டாயமாக நிறைவேறியேத் தீரும்.

ஆமென்.!

வெள்ளி, 10 ஜூலை, 2020

நிரப்பப்படாததா(ல்/ள்)

வெற்றுத்தாள்களாய் இருந்த நாங்களிருவரும்,
சரியான பதில்களாய் நினைத்துக்கொண்டு
கேள்விகளையே பாராமல்  எழுதமுயன்றோம்,
எனக்கான பதிலாய் நான் அவளையும் 
அவளுக்கான பதிலாய் நானுமென்று.

பின்னர்தான் தெளிவடைந்தோம் உணர்ந்து,
வேற்றுத்தாள்களாய் மாறிப்போனதையறிந்து
எழுத எத்தனிக்கும்போதே எதிர்ப்பைப்புரிந்து,
விடையெழுதாமலே விடைபெற்றுக்கொண்டு
அவரவர்தாள்களை திரும்பப்பெற்றுக்கொண்டு.

எங்களதுதாள்களில் கையெழுத்து இட்டுவிட்டு,
வெறுந்தாள்களாய் கர்த்தரிடம் சமர்ப்பித்துவிட்டு
கேள்விக்கேட்டதற்கு பதிலாக, காத்திருந்துப்பின்
கேள்விக்கேற்ற பதிலாக சரியான விடையைப்பெற
திருத்துபவரிடமே திருந்திப்போய் நிற்கின்றோம்.

திரும்பப்போய் அவரிடம் நாங்கள் நின்றாலும்,
கேள்விக்கு பதில்களாக இல்லை என்றாலும்,
எழுதியுள்ளதெல்லாம் எங்கு எப்படி சென்றாலும்,
கடைசி மூச்சுவரை எங்களை வென்றாளும்
கிறிஸ்துவிடமே ஒப்படைத்திருக்கிறோம் எங்களை.!


செவ்வாய், 16 ஜூன், 2020

மிஸ்டு கால்

கொடுத்த கடனை திரும்பக் கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் வாங்கியவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று கொடுத்தவனும்,

திரும்பக் கடன் வேண்டுமென கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் கொடுத்தவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று வாங்கியவனும்

நினைத்துக்கொள்வார்களோ என்னவோ
சகஜமாகக்கூட பேசிக்கொள்ளமுடியாதபடி
பலரது கால்கள் அழைக்கப்படாமலேயே
மிஸ்டு கால்களாகிக் கிடக்கின்றன.!


திங்கள், 8 ஜூன், 2020

COVIDடை மாற்ற DAVIDடாய் மாறு

கண்ணுக்குத் தெரியாத வைரஸைக்கொண்டு,
கண்ணோக்கியும்மைப் பார்க்கச் செய்தவரே;

எல்லாரையும் வீட்டிலேயே முடங்கச் செய்து,
முழங்காலில் எங்களை மடங்கச் செய்தவரே;

நீர் அனுமதித்துவந்த வாதையைக் கொண்டே,
எங்களது பொல்லாப் பாதையை மாற்றினீரே;


கொள்ளைநோயை எழுப்புதலின் ஆயுதமாக்கி,
உம் வருகைக்கு எங்களை ஆயத்தமாக்கினீரே;

பெயரளவில் கிறிஸ்தவராக வாழ்ந்தவரையும்கூட,
பேரழிவினின்று காத்து மனதையும் மாற்றினீரே;


இந்தியாவிலிருந்து எழுப்புதலை தொடங்குபவரே,
ஆச்சர்யப்படத்தக்கவிதமாயதனை முடிப்பவரே; 

வெகு சாதாரணமான எங்களைக்கொண்டும்,
மிகு அசாதாரணமான காரியங்கள் செய்வீரே;

மீண்டுமொருமுறை பூமிக்கு வரப்போகிறவரே,
மீண்டெழுந்து உம்மண்டை சேரப்பண்ணுவீரே.!

வெள்ளி, 1 மே, 2020

Little Hearts 💙💚💛💜

வெறும் லைக்குகள்கூட👍 சூழா
என் முகநூலுலகை இப்போது
நிறைய ஹார்டின்களாலும் ♥
நிரப்பச் செய்தவளும்
நிரம்பச் செய்தவளும் 
நிரப்பிச் சென்றவளும் 
நீயடி.!



வெள்ளி, 13 மார்ச், 2020

Physikissu 💙💚💛💜

உனக்கு நேர்மின்வாயாக நானும்
எனக்கு எதிர்மின்வாயாக நீயும்
வாய்க்கப்பெற்றதாலோ என்னவோ,
அடிக்கடி மின்னோட்டம் நடந்து
உன் உதட்டுச் சாயமானது
என்னுதட்டில் முலாம் பூசுகிறது.!


Che-miss-try / Che-mystery 💙💚💛💜

You're the Catalyst to Secrete
'Oxytocin' automatically in me,
By your Comical Reactions Dear.!


வியாழன், 27 பிப்ரவரி, 2020

(ச)ரசவாதம் 💙💚💛💜

எனக்குள் வேதிவினை புரிந்து
ஆக்ஸிடோசினை அடிக்கடி
சுரக்கச் செய்யும் என்னுடைய
வினையூக்கி நீதான் கண்மணி.!


நமக்கிடையேதான் ஏனோவந்த,
கெமிஸ்ட்ரியானது வொர்க்கவுட்
ஆகமறுத்து அட்ரினலினை
சுரந்து தொலைக்கிறது உனக்குள்.!



உணர்வு   -  சுரக்கும் ஹார்மோன்
காதல்       -  ஆக்ஸிடோசின்
கோவம்   -  அட்ரினலின்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

மன்னா

"மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல,
கர்த்தராகிய தேவனுடைய வாயிலிருந்து 
புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் 
பிழைப்பான்." என்கிற உம்முடைய 
இவ்வார்த்தையே என்னை பசியாற்றுகிறது  
பணமற்ற பசியுற்ற நாட்களில்.!