பெண் மனம்:
பிரம்மிக்கப்பட்டு
ரசிக்கப்பட்டு
தொல்லையாகிப் பின்
இல்லாமல்போவதே இந்த
பாசத்தின் இயல்பு.!
விலகிச்செல்ல விழைந்தாலும்
விதியென்னவோ விளையாடித்தான் பார்க்கிறது.!
தனித்து நடக்கப் பழகிக்கொள்கிறேன்,
என் சாலையைக் கடக்க நான் மட்டும் போதும்,
உனக்கான என் இறுதி நிலைப்பாடு.!
ஆண் மனம்:
இல்லாததையும்கூட
தொல்லையென்றெண்ணாமல்
ரசிப்பதும் பிரம்மிப்பதுமே பாசத்தின் இயல்பு.!
விதி விளையாடித்தான் பார்க்கும்
நீ விழைகிறாயா இல்லை விலகுகிறாயாவென.!
போ,
தணிந்தபின் வந்து
தனித்து நடக்க
துணிந்ததை மற,
உன் சாலையோரமே காத்திருப்பேன்,
உனக்கானவனின் இறுதி நிலைப்பாடு.!
குறிப்பு:
இங்கு 'பெண் மனம்' பகுதியின் கவிதையானது, ஒரு பெண் தனது முகநூல் பதிவில் பதிவிட்டது. நான் அக்கவிதைக்கு எதிர்க்கவிதையாக ஒரு ஆணின் பார்வையில் இக்கவிதையினை நீட்டித்துள்ளேன்.
முற்பாதி நன்றாயிருந்தால், அதன் முழுப்புகழும் அப்பெண்ணிற்கே சொந்தம். பிற்பாதி நன்றாயிருந்தால் (இருக்காது, அப்படி ஒருவேளையிருந்தால்) எனக்குச் சொந்தம்.